
தியேட்டரில் ரிலீசான ஒரே வாரத்தில் ஓடிடிக்கு வந்த புனித் ராஜ்குமார் படம்
கல்வி அமைப்பை தனியார்மயமாக்கும் அரசியல் தொடர்புகளால் மூடப்படும் நிலைக்குச் செல்லும் ஒரு புகழ்பெற்ற கல்லூரியைச் சுற்றி யுவராத்னாவின் கதைக்களம் அமைந்துள்ளது. அந்தக் கல்லூரியின் முதல்வர் தனியார் மயமாக்கலுக்கு எதிராகப் போராடுகிறார். ராஷ்ட்ரகுடா பல்கலைக்கழகத்தில் ஒரு பொறியியல் மாணவனாகச் சேரும் அர்ஜூன் அதாவது புனீத் ராஜ்குமார், அவரது இயக்கத்துக்கு ஆதரவாக இருக்கிறார். அதன் பின் என்ன நடந்தது? அவர்களது முயற்சியில் அவர்கள் வெற்றி காணுவார்களா? என்பதுதான் படத்தின் கதை.
யுவரத்னா திரையரங்குகளில் வெளியான ஒரே வாரத்தில் ஓடிடி தளத்திலும் வெளியாகி உள்ளது. திரையரங்குளில் வெளியாக நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் படம் ஓடிடியில் வெளியானது கன்னட தியேட்டர் அதிபர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!