
சல்யூட்டை முடித்த துல்கர் சல்மான்
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய படப்பிடிப்பை ஒரேக்கட்டமாக நடத்தி முடித்துள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ். கதாநாயகியாக பாலிவுட்டை சேர்ந்த டயானா பென்ட்டி என்பவர் நடித்திருக்கிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது பற்றி துல்கர் சல்மான் கூறும்போது, “சல்யூட் முடிந்தது. அரவிந்த் கருணாகரனுக்கு (படத்தில் துல்கரின் பெயர்) ஒரு சல்யூட்டுடன் பிரியாவிடை கொடுக்கிறேன்..இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக ரோஷன் இயக்குனர் ஆன்ட்ரூஸுக்கு நன்றி. மேலும் இந்தப்படத்தை தயாரிக்கும் வாய்ப்பும் எனக்கே கிடைத்ததில் இன்னும் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!