
இன்று போலீஸ்.. நாளை நீதிபதி ; இருமுகம் காட்டும் குஞ்சாக்கோ
அந்தப்படமே இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் தற்போது இன்று குஞ்சாக்கோ நடித்துள்ள "நாயாட்டு" என்கிற படம் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் சராசரி போலீஸ்காரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குஞ்சாக்கோ. துல்கர் சல்மான் நடித்த சார்லி, ஏபிசிடி ஆகிய படங்களை இயக்கிய மார்ட்டின் பரக்கத் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
அதேசமயம் நாளை குஞ்சாக்கோ போபன் நடித்துள்ள நிழல் என்கிற படமும் வெளியாகிறது. இந்தப்படத்தில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஜான் பேபியாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். ஆனால் மாஸ்க் அணிந்த ஒரு ராபின் ஹூட் கதாபாத்திரத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பது போல போஸ்டர்களை வெளியிட்டு படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். தவிர இந்தப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!