
பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த மோகன்லால்!
இந்த நிலையில், ஸ்ரீதரனுக்கு ஆதரவு தெரிவித்து மலையாள நடிகர் மோகன்லால் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இந்தியர்கள் பெருமைப் படக்கூடிய மனிதராக மெட்ரோமேன் ஸ்ரீதரன் இருக்கிறார். பாம்பம் பாலம், கொங்கன் ரயில்வே பணிகள், கொச்சி டூ டில்லி மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளை திட்டமிட்டதை விட குறைவான நாட்களில் முடித்தவர். அதோடு, மீதமுள்ள நிதியை அரசாங்கத்திடம் திருப்பி அளித்தவர். இவரது சேவை நாட்டுக்கு தேவை. கேரள சட்டசபை தேர்தலில் ஸ்ரீதரன் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் மோகன்லால். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!