
தியேட்டர் பக்கம் வரவே பஹத் பாசிலுக்கு விருப்பமில்லையோ ?
அதையடுத்து கொரோனா தாக்கம் நீங்கியிராத நிலையில் கடந்த செப்டம்பர் மாதமே மீண்டும் "இருள்" என்கிற படத்தின் படப்பிடிப்பையும் கேரளாவில் வாகாமன் பகுதியில் துவங்கியவர், இதோ இன்று அந்தப்படத்தை ரிலீஸும் செய்துவிட்டார்.. வழக்கம்போல இதுவும் ஒடிடி (நெட்பிளிக்ஸ்) தளத்தில் தான் வெளியாகியுள்ளது.
இதில் இன்னொரு ஆச்சர்யமாக மகேஷிண்டே பிரதிகாரம் என்கிற ஹிட் படம் மூலமாக சரிந்துகிடந்த பஹத் பாசிலின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய இயக்குனர் திலீஷ் போத்தனுடன் மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள "ஜோஜி" படத்தையும் முடித்து இன்று அதன் ட்ரெய்லரும் வெளியாகியுள்ளது. த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தபடம் இன்னும் நான்கு நாட்கள் கழித்து (ஏப்-7) ரிலீசாகிறது. இதையும் ஒடிடி (அமேசான் பிரைம்) தளத்திலேயே ரிலீஸ் செய்கிறார்கள். தற்போது கேரளாவில் மலையாள படங்கள் தியேட்டர்களிலேயே வெளியாகி வரும் சூழலில், பஹத் பாசிலுக்கு மட்டும் தியேட்டர் பக்கமே வர விருப்பம் இல்லை போல தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!