
கீர்த்தி சுரேஷுக்கு நிதின் வித்தியாசமான அழைப்பு
அதனால் இந்தப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நிதின், கீர்த்தி சுரேஷ் புரமோஷன் நிகழ்சியில் கலந்து கொள்ள வேண்டும் என வித்தியாசமான பாணியில் வேண்டுகோள் விடுத்தார். கீர்த்தி சுரேஷின் பள்ளிக்கால போட்டோ ஒன்றை தனது கையில் வைத்தபடி சோஷியல் மீடியாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்ட நிதின், “மிஸ்ஸிங்.. காணவில்லை. டியர் அனு.. ரங்தே புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டே ஆக வேண்டும் என்பது எங்களுடைய மேலான கோரிக்கை.. இப்படிக்கு உன்னுடைய அர்ஜுன்” என நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார். .
இதனையே அழைப்பாக ஏற்று கீர்த்தி சுரேஷும் தவறாமல் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.. இந்தப்படத்தில் அனுவாக கீர்த்தி சுரேஷும், அர்ஜுனாக நிதினும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!