
தெலுங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜதி ரத்னலு
ரவி தேஜா, ஸ்ருதிஹாசன் நடித்து வெளிவந்த கிராக், அடுத்து புதுமுகங்கள் வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி நடித்து வெளிவந்த உப்பெனா ஆகிய படங்கள் வசூலை அள்ளித் தந்தன. அந்த வரிசையில் நகைச்சுவை நடிகர்கள் சிலர் நாயகர்களாக இணைந்து நடித்த ஜதி ரத்னலு படத்தின் வெற்றியும், வரவேற்பும் அவர்களை திக்குமுக்காட வைத்துவிட்டது.
கே.வி.அனுதீப் இயக்கத்தில் ரதன் இசையமைப்பில், நவீன் பொலிஷெட்டி, பிரியதஷி, ராகுல் ராமகிருஷ்ணன், பரியா அப்துல்லா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ஜதி ரத்னலு. இப்படத்தை நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான மகாநடி படத்தை இயக்கிய நாக் அஷ்வின் தயாரித்துள்ளார். படத்தில் கீர்த்தி சுரேஷ், விஜய் தேவரகொண்டா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்கள்.
இப்படத்தைப் பாராட்டி மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்களும் பதிவிட்டதால் படம் எதிர்பார்த்ததை விடவும் வசூலைக் குவித்து வருகிறதாம். தமிழ் ரீமேக்கிற்கு இந்நேரம் சிலர் போட்டி போட ஆரம்பித்திருப்பார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!