
ஓடிடியில் வெளியாகும் பஹத் பாசிலின் இருள்
இப்போது நிலைமை ஓரளவு சரியாகி விட்டதால், இந்தப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தப்படமும் ஓடிடி தளத்தில் தான் வெளியாக இருக்கிறதாம். நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் .லாபகரமான தொகைக்கு ஒப்பந்தம் போடப்பட்டு விட்டதாம். ஆனாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்த விஷயத்தை அறிவிக்கவில்லை.
காரணம் இந்தப்படத்தை பஹத் பாசில் மற்றும் மம்முட்டியின் ஆதரவு தயாரிப்பாளரான ஆன்டோ ஜோசப் ஆகியோர் தான் இணைந்து தயாரித்துள்ளார்கள். சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம்-2வை தியேட்டர்களில் வெளியிடாமல் ஓடிடிக்கு கொடுத்ததற்காக அவர் மீது வருத்தத்தில் இருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள். அதனால் மெதுவாக இந்த விஷயத்தை வெளியே அறிவிக்கலாம் என மௌனம் காக்கிறது பஹத் பாசில் தரப்பு.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!