
பிக்பாஸ் மலையாளம் சீசன்- 3 ஆரம்பம்
மலையாளத்தில் பிக்பாஸ் சீசன்-2 கடந்த வருடம் ஜன-5 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு கடந்த மார்ச் 20ஆம் தேதி அதாவது 76வது எபிசோட் வரை ஒளிபரப்பானது. அந்தசமயத்தில் கொரோனா தாக்கம் மற்றும் அதை தொடர்ந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த நிகழ்ச்சி 76 நாட்களுடன் நிறுத்தப்பட்டது..
அதேபோல கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த சில சச்சரவு நிகழ்வுகளும், அவற்றை கையாள்வதில் மோகன்லால் பாரபட்சமாக நடந்து கொண்டார் என்றும் விமர்சித்து,, அவருக்கு பதிலாக நடிகர் சுரேஷ்கோபி இந்த நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என சிலர் வேண்டுகோள் வைத்தனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத சேனல் நிர்வாகம் இந்தமுறையும் மோகன்லாலுக்கே அந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!