
துல்கர் படப்பிடிப்பில் இணைந்த டயானா பென்ட்டி
இந்தப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட்டை சேர்ந்த டயானா பென்ட்டி என்பவர் நடிக்கிறார்.. இவர் லக்னோ சென்ட்ரல், தி ஸ்டோரி ஆப் பொக்ரான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
இந்தநிலையில் நாயகி டயானா பென்ட்டியும் நேற்று முதல் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து துல்கருடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள டயானா, முதன்முறையாக மலையாளத்தில் நடிப்பது, அதுவும் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!