
விக்ரம் படத்தை கிடப்பில் போட்டுவிட்டு தயாரிப்பாளராக மாறிய இயக்குனர்
விக்ரமும் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.. ஆனால் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கிய அந்த படத்தின் படப்பிடிப்பு, அதற்குப் பிறகு நடைபெற்றதாக எந்த தகவலும் இல்லை.. அதுமட்டுமல்ல இயக்குனர் ஆர்.எஸ்.விமல், புதிதாக ரொமான்டிக் காமெடி படம் ஒன்றை இயக்க உள்ளார் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் திடீரென தயாரிப்பாளராக மாறிய ஆர்.எஸ்.விமல் சேத்தி மந்தாரம் துளசி" என்கிற படத்தை தயாரித்து வருகிறார்.
கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க, ஜெய் ஜனார்த்தனன், ராகுல் மற்றும் ஜிம்ஷர் என மூன்று அறிமுக இயக்குனர்கள் இணைந்து இந்தப்படத்தை இயக்கி வருகின்றனர். அப்படி என்றால் மகாவீர் கர்ணா கைவிடப்பட்டு விட்டதா, அல்லது தற்சமயம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதா என்பதை விக்ரம்-ஆர்.எஸ்.விமல் இருவரில் யாரவது ஒருவர் சொன்னால் தான் உண்டு.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!