
மோகன்லால் ரசிகர்களை பரவசப்படுத்திய ஆராட்டு பட போஸ்டர்
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஸ்படிகம், நரசிம்மம் ஆகிய படங்களில் பார்த்த அதே ஆக்ரோஷமான மோகன்லாலை இந்த படத்தில் மீண்டும் பார்க்கலாம் என, படம் ஆரம்பிக்கும்போதே இயக்குனர் உன்னி கிருஷ்ணன் கூறியிருந்தார்.
இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்தப்படத்தின் போஸ்டரில் மோகன்லாலின் ஆக்சன் லுக்கை பார்த்ததும் அவரது ரசிகர்கள் பரவசமடைந்துள்ளார்கள்.. குறிப்பாக புலிமுருகன் படத்திற்கு பிறகு, தங்களை திருப்திப்படுத்தும் ஆக்சன் படமாக "ஆராட்டு" இருக்கும் என சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!