
பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல்
உத்தமவில்லன் படத்தில் கமலின் மகளாக பார்வதி நடித்திருந்தார் என்றாலும், கமல் இந்த படத்தின் டீசரை வெளியிட்டது படத்தின் இயக்குனர் மற்றும் எடிட்டர் இருவரின் நட்புக்காகத்தான். ஆம்.. கமலின் விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாகங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஷானு ஜான் வர்கீஸ் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். விஸ்வரூபம் படத்திற்கு படத்தொகுப்பு செய்த மகேஷ் நாராயணன் தான் இந்தப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
பிஜுமேனன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படம் வரும் பிப்-26ல் ரிலீஸாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தாக்கம் ஆரம்பித்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் மும்பையிலிருந்து கேரளாவுக்கு, ரயிலில் பயணிக்கும் ஒரு தம்பதி, ஊரடங்கால் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையப்படுத்தி இந்தப்படத்தின் கதை உருவாகியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!