
பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள்
அதில் ஒன்று, தேசிய விருதுபெற்ற இயக்குனர் சித்தார்த் சிவா இயக்கத்தில் பார்வதி நடித்துள்ள வர்த்தமானம் என்கிற படம். இந்தப்படத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவியாக நடித்துள்ளார் பார்வதி. இந்தப்படம் வரும் பிப்-19ஆம் தேதி வெளியாகிறது.
இன்னும் பெயரிடப்படாத இன்னொரு படத்தில் கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் ரயில் பயணத்தில் கணவனுடன் சேர்ந்து தம்பதி சகிதமாக மாட்டிக்கொண்ட பயணியாக நடித்துள்ளார் பார்வதி. விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாகங்களுக்கும் ஒளிபதிவு செய்த ஷானு ஜான் வர்கீஸ் இயக்கியுள்ள இந்தப்படம் வர்த்தமானம் படத்திற்கு முன்பே, அதாவது பிப்-4ல் வெளியாக இருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!