
லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா
மோகன்ராஜா இயக்கிய தனி ஒருவன் மற்றும் வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களில் நயன்தாரா ஏற்கனவே பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்ல, சிரஞ்சீவியின் முந்தைய படமான "சைரா நரசிம்ம ரெட்டி" படத்திலும் நயன்தாரா தான் கதாநாயகி. அதனால் லூசிபர் ரீமேக்கில் அவரை இணைத்துக்கொண்டதில் ஆச்சர்யம் இல்லை என்றாலும் அந்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்தால் தான் எடுபடும் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.. ஆனால் அதேசமயம் மலையாள ஒரிஜினலில் ஹீரோ மோகன்லாலுக்கு ஜோடி இல்லை. மேலும் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் தான் நயன்தாரா நடிக்கிறார் என்பதால், வில்லனுக்கு மனைவியாகத்தான் அவர் நடிக்க உள்ளார் என்றே தெரிகிறது.. வில்லனாக நடிக்க இருப்பவர் யார் என்பது பற்றி விரைவில் தெரியவரும் என நம்பலாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!