
போதை பொருளுடன் தெலுங்கு நடிகை கைது
மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மும்பையில் உள்ள பல நட்சத்திர ஓட்டல்களில் போதை பொருள் புழக்கம் தாராளமாக நடப்பதாக தகவல் வந்தது. இதை தொடர்ந்து போலீசார் நட்சத்திர ஓட்டலில் சோதனை நடத்தியபோது கணிசமான போதை பொருட்களுடன் பெண் ஒருவர் சிக்கினார். அவர் அங்குள்ள விவிஐபிக்களுக்கு சப்ளை செய்வதற்காக வந்தவர் என்றும் தெரிந்தது.
போலீசார் அவரிடம் விசாரித்ததில் அவரது பெயர் சுவேதா குமாரி என்பதும், அவர் ரிங் மாஸ்டர் என்ற கன்னடப் படத்திலும், தெலுங்கில் 10க்கும் மேற்பட்ட படங்களில் 2வது நாயகியாக நடித்திருப்பதும் தெரிய வந்தது. சுவேதாவிடம் இருந்து 10 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தெலுங்கு பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!