
ஜிமிக்கி கம்மல் பாடலாசிரியர் மரணம்
கடந்த 2005 முதல் மலையாள திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி வந்த அனில் பனச்சூரன், அடிப்படையில் கம்யூனிச சிந்தனை கொண்டவர்.. அதனால் மலையாளத்தில் கம்யூனிச கதைக்களத்தில் உருவான படங்களில் அதிகம் பாடல்கள் எழுதியுள்ளார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன் மோகன்லால் நடிப்பில் வெளியான, "வெளிப்பாடிண்டே புஸ்தகம்" படத்தில் இவர் எழுதிய "ஜிமிக்கி கம்மல்" பாடல் உலக அளவில் புகழ்பெற்று, இவரை இன்னும் நன்கு பிரபலமாக்கியது.. கடந்த வருடம் விஜய்சேதுபதி மலையாளத்தில் அறிமுகமான மார்க்கோனி மத்தாய் படத்திலும் இவர் பாடல் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!