
ஐந்து மொழிகளில் வெளியாகும் துல்கர் சல்மானின் குறூப்
துல்கர் நடித்த படங்களிலேயே மிக அதிக பொருள் செலவில், சுமார் 35 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் இது. அதனால் இந்தப்படத்தை மலையாளம் மட்டுமல்லாது அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் என, ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட இருக்கிறார்களாம். இந்தநிலையில் புத்தாண்டை முன்னிட்டு இந்தப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வித்தியாசமான ஹேர்ஸ்டைல், எண்பதுகளின் உடைகள் என சுகுமார குறூப்பின் தோற்றத்தில் துல்கர் சல்மான் பார்ப்பதற்கு ஆளே மாறிப் போயுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!