
டிக்கெட் கட்டணத்தைக் குறைத்த பெத்தி
புச்சிபாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், ராம்சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளியான தெலுங்குப் படம் "பெத்தி". பான் இந்தியா படமாக வெளியானாலும் தெலுங்கைத் தவிர மற்ற மொழிகளில் இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்தும் படத்திற்கான “பிரேக் ஈவன்" நடக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் படத்திற்கான டிக்கெட் கட்டணத்தைக் குறைத்து இன்னும் கூடுதலான வசூலைப் பார்க்கலாம் என படத்தின் நிஜாம் ஏரியவை வாங்கியுள்ள மைத்திரி மூவி வினியோக நிறுவனம் முடிவு செய்துள்ளது. தெலுங்கில் முக்கியமான நிஜாம் ஏரியாவில் இன்று முதல் குறைந்தபட்ச கட்டணமாக 50 ரூபாயும், அதிகபட்ச கட்டணமாக 105 ரூபாயும் சிங்கிள் தியேட்டர்களில் வசூலிக்கப்பட உள்ளது.
தென்னிந்திய அளவில் அதிக வசூலைக் குவித்த படம் என நம்பர் 1ல் இருந்தாலும் இந்தப் படம் பான் இந்தியா அளவில் வசூலைக் குவிக்க முடியாமல் போனதில் படக்குழுவினருக்கு நிறையவே வருத்தம் என்கிறார்கள்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!