
ஒரு வழியாக ஜூலை 16ல் ரிலீசாகும் வரவு
அந்த வகையில் தற்போது "வரவு" என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ஜோஜு ஜார்ஜ். பிரபல கமர்சியல் இயக்குனரான ஷாஜி கைலாஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஏற்கனவே மே-1 மற்றும் ஜூன் 12 ஆகிய தேதிகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு தள்ளிப் போன நிலையில், தற்போது ஜூலை 16-ம் தேதி உறுதியாக ரிலீஸ் ஆக இருக்கிறது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ரசிகர்களுக்குச் சிறந்த சினிமா அனுபவத்தைத் தரவே இந்த தாமதம் ஏற்பட்டது என்று படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளார்கள். மிகப்பெரிய செல்வந்தரான ஜோஜு ஜார்ஜ், சிறை தண்டனை முடிந்து சொந்த ஊருக்கு வரும்போது கடந்த காலங்களில் நிலுவையில் இருந்த பிரச்சனைகளை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!