
சினிமாவில் சிஎம் ஆக நடிப்பது எளிது.. நிஜத்தில் எம்எல்ஏவாக இருப்பது தான் கஷ்டம் : மம்முட்டி
தமிழகத்தில் சினிமா துறையைச் சேர்ந்த நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி, முதல் தேர்தலிலேயே முதல்வர் ஆகியிருப்பது பக்கத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவில் நடித்த சமயத்தில் "சர்க்கார்" படத்தில் புதிதாக கட்சி துவங்கி ஆட்சி அமைக்கும் இளைஞராக விஜய் நடித்திருப்பார். அதேபோல மலையாள திரையுலகில் முதல்வர் கதாபாத்திரத்தில் அதிகம் நடித்துள்ள ஹீரோ என்றால் அது நடிகர் மம்முட்டி தான்.
சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட மம்முட்டியைப் பார்த்து இன்னொரு மலையாள நடிகரான ரமேஷ் பிஷரோடி என்பவர் பேசும்போது, "மம்முட்டி திரையில் வெறும் சாதாரண அரசியல்வாதியாக நடிக்கவில்லை. அவர் இதுவரை மூன்று படங்களில் முதல்வராக நடித்துள்ளார்" என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.
உடனே குறுக்கிட்டு பேசிய மம்முட்டி, "திரையில் முதல்வராக நடிப்பது எல்லாம் ஒரு விஷயமே இல்லை, யார் வேண்டுமானாலும் நடித்து விடலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒரு சாதாரண எம்எல்ஏவாக வாழ்வது தான் மிகவும் கடினமான விஷயம்" என்று கூற, மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் மம்முட்டியின் இந்த நகைச்சுவையான பதிலைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!