
பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி
அந்த சமயத்தில் படப்பிடிப்பின் கடைசி நாளன்று நடிகர் சிரஞ்சீவியும், புஷ்பா பட இயக்குனர் சுகுமாரும் சேர்ந்து பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்து படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் அளித்துள்ளனர். அப்போது நடிகர் சிரஞ்சீவி, இயக்குனர் புச்சி பாபு சனாவிடம் "எனக்காக ராம்சரண் சைக்கிள் ஓட்டுவது போல ஒரு காட்சியை படமாக்குங்கள்" என்று ஜாலியாக ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார்.
இயக்குனர் புச்சி பாபு சனா, சுகுமாரின் சீடர் என்பதும், இந்த படத்தில் ஆரம்பம் முதல் கதை விவாதம் வரை சுகுமாரின் பங்களிப்பும் இதில் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!