
பெத்தி வந்தால் லெனின் பின்வாங்குமா
ஏப் 27, 2026
Advertisement
தெலுங்கில் புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள படம் பெத்தி. விளையாட்டை மையமாக கொண்ட கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பெத்தி படம் ஜூன் 25ம் தேதி திரைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அடுத்த நாளான ஜூன் 26ம் தேதி அகில் அக்கினேனி நடித்துள்ள லெனின் என்ற படத்தை வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். இப்போது ராம்சரண் படத்துடன் அகில் அக்கினேனி படத்தை வெளியிட்டால் திரையரங்குகளின் எண்ணிக்கை மட்டுமின்றி வசூலும் பெரிய அளவில் குறைந்து விடும் என்பதால் லெனின் படத்தின் ரிலீஸ் தேதியை ஜூன் மாதத்தில் இருந்து ஜூலை மாதத்திற்கு மாற்ற அப்படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!