
17 நாட்களிலேயே 200 கோடி வசூலித்த வாழ 2
இத்தனைக்கும் இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் கிட்டத்தட்ட புதுமுக டீன் ஏஜ் இளைஞர்கள் தான். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான வாழ படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 100 கோடி வசூலித்தது. அந்த எதிர்பார்ப்பில் வெளியான "வாழ 2" திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றாமல் 200 கோடி வசூலித்துள்ளது.
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே மற்றும் குருவாயூர் அம்பல நடையில் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் விபின் தாஸ் இந்த இரண்டு பாகங்களுக்கும் கதை எழுதி தயாரித்துள்ளார். அந்த வகையில் வெற்றிப்பட இயக்குனராக மட்டுமல்ல தொடர்ந்து வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார் விபின் தாஸ்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!