
ரூ.100 கோடி வசூலைக் கடந்த வாழ 2
முதல் பாகம் சுமார் 4 கோடி செலவில் தயாராகி 40 கோடி வரை வசூலித்தது. இரண்டாம் பாகம் சுமார் 10 கோடி செலவில் தயாராகி தற்போது 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடத்தில் அதிக வசூலைக் கொடுத்துள்ள மலையாளத் திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது.
மலையாளத்தில் 100 கோடி வசூலைக் கடந்துள்ள 15வது படம் இது. 2016ல் வெளிவந்த மோகன்லால் நடித்த "புலி முருகன்" படம் தான் மலையாளத்தின் முதல் 100 கோடி திரைப்படம். அதற்கடுத்து "லூசிபர்" படமும் அந்த வசூலைக் கடந்தது.
மலையாளத்தில் அதிக வசூலைக் குவித்த படமாக 2025ல் வெளிவந்த "லோகா" படம் உள்ளது. அப்படம் 300 கோடி வசூலைக் கடந்த முதல் மலையாளத் திரைப்படம் என்ற சாதனையைப் புரிந்தது. 2025ல் வெளிவந்த படங்களில் "லோகா, லூசிபர் 2, தொடரும், சர்வம் மாயா" ஆகிய 4 படங்கள் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இந்த வருடத்தில் "ஆடு 3" படம் 100 கோடியைக் கடந்தது. தற்போது "வாழ 2" படமும் கடந்துளளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!