
ஆக்சன் காட்சிகளை படமாக்க பிப்ரவரியில் ஜோர்டனுக்கு பறக்கும் டிராகன் குழு
"கேஜிஎப்" படத்தின் இரண்டு பாகங்கள் மற்றும் "சலார்" படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது, ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் "டிராகன்" படத்தை இயக்கி வருகிறார். ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வரும் பிப்ரவரியில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக டிராகன் படக்குழுவினர் ஜோர்டன் நாட்டுக்கு பயணிக்க இருக்கின்றனர். இங்கே மொத்தம் அதிரடியான மூன்று சண்டை காட்சிகளை அவர்கள் படமாக்க திட்டமிட்டுள்ளனர். கிட்டத்தட்ட பிப்ரவரி மாதம் முழுவதும் அங்கே படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!