
சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண்
இந்த படத்தை தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனரான சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இவர் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், ராம்சரண் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்கியவர். கடந்த 2019ல் சிரஞ்சீவி நடிப்பில் வரலாற்று படமாக வெளியான சைரா நரசிம்மர் ரெட்டி படத்தை இயக்கியதும் இவர்தான். கடந்த 2023ல் இவரது இயக்கத்தில் அகில் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான ஏஜென்ட் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. இந்த நிலையில் தான் பவன் கல்யாண் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் சுரேந்தர் ரெட்டி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!