
கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 9 விருதுகளை அள்ளிய மஞ்சும்மல் பாய்ஸ்
கேரள அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான சினிமா விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. திருச்சூரில் உள்ள ராமநிலயத்தில் கேரள கலாச்சாரம் மற்றும் திரைப்படத்துறை அமைச்சர் சஜி செரியன் இதனை அறிவித்தார். அப்போது ஏழு பேர் கொண்ட நடுவர் குழுவினரும் உடன் இருந்தனர்.
சிறந்த நடிகருக்கான விருது மம்முட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. "பிரம்மயுகம்" படத்தில் நடித்தற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. கேரள மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருது மம்முட்டிக்கு வழங்கப்படுவது இது 8வது முறையாகும். "பெமினிச்சி பாத்திமா" படத்துக்காக ஷம்லா ஹம்சா சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.
சிறந்த சினிமாவுக்கான விருது கொடைக்கானல் குணா குகையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட "மஞ்சும்மல் பாய்ஸ்" படத்திற்கும், சிறந்த இயக்குநருக்கான விருது அப்படத்தை இயக்கிய சிதம்பரத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே படத்தில் நடித்த நடிகர் சவுபின் சாஹிர் துணை நடிகருக்கான விருதையும், ஷைஜு காலித் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதையும், வேடன் சிறந்த ஆண் பாடகருக்கான விருதையும், ஷிபின் மெல்வின் சிறந்த ஒலிப்பதிவாளருக்கான விருதையும், பசல் பக்கர் சிறந்த ஒலிகலவைக்கான விருதையும், அபிஷேக் நாயர் சிறந்த ஒலி வடிவமைப்பிற்கான விருதையும் பெற்றனர். அஜயன் சாலிசேரி சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் அஜயன் சாலிசேரி சிறந்த கலை இயக்குனருக்கான விருதையும் பெற்றனர். இதன் மூலம் மஞ்சும்மல் பாய்ஸ் 9 விருதுகளை அள்ளினர்.
மற்ற விருது பெற்ற மற்றவர்கள் வருமாறு:
றந்த குணச்சித்திர கலைஞர் (பெண்): "நாடன்ன சம்பவம்" படத்துக்காக லிஜோமோல் ஜோஸ்
நடிப்புக்கான சிறப்பு ஜூரி விருது (ஆண்): "ஏஆர்எம்" மற்றும் "கிஷ்கிந்தா காண்டம்" படங்களுக்காக டோவினோ தாமஸ் மற்றும் ஆசிப் அலி
நடிப்புக்கான சிறப்பு ஜூரி விருது (பெண்): "போகேன்வில்லா" படத்துக்காக ஜோதிர்மயி மற்றும் "பாரடைஸ்" படத்துக்காக தர்ஷனா ராஜேந்திரன்
சிறந்த இரண்டாவது படம்: "பெமினிச்சி பாத்திமா"
சிறந்த அறிமுக இயக்குனர்: "பெமினிச்சி பாத்திமா" படத்துக்காக பாசில் முகமது
சிறந்த பிரபலமான திரைப்படம்: "பிரேமலு"
சிறப்பு ஜூரி பெண்கள்/திருநங்கைகளுக்கான விருது: "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" படத்துக்கா பாயல் கபாடியா
சிறந்த கதை: "பாரடைஸ்" படத்துக்காக பிரசன்னா விதானேஜ்
சிறந்த திரைக்கதை: "போகன்வில்லா" படத்துக்காக லாஜோ ஜோஸ் மற்றும் அமல் நீரட்
சிறந்த விஎப்எக்ஸ் தொழில்நுட்பம்: "ஏஆர்எம்"
சிறந்த நடன இயக்குனர்: "போகன்வில்லா" படத்துக்காக சுமேஷ் சுந்தர், ஜிஷ்ணுதாஸ் எம்.வி.
சிறந்த ஆடை வடிவமைப்பு: "ரேகசித்ரம்" மற்றும் "போகன்வில்லா" படங்களுக்காக சமீரா சனீஷ்
சிறந்த ஒப்பனை கலைஞர்: "போகன்வில்லா" மற்றும் "பிரம்மயுகம்" படங்களுக்காக ரோனெக்ஸ் சேவியர்
சிறந்த ஒத்திசைவு ஒலி: "பானி"
சிறந்த இசையமைப்பாளர்: "போகன்வில்லா" படத்துக்காக சுஷின் ஷ்யாம்
சிறந்த பின்னணி இசை: "பிரம்மயுகம்" படத்துக்காக கிறிஸ்டோ சேவியர்
சிறந்த பின்னணி பாடகி: "அம் ஆ" படத்தின் "ஆரோரம்" பாடலுக்காக ஜெபா டாமி
சிறந்த பின்னணி பாடகர்: "ஏஆர்எம்" படத்தின் "கிளியே" பாடலுக்காக கே.எஸ். ஹரிசங்கர்
சிறந்த எடிட்டர்: "கிஷ்கிந்தா காண்டம்" படத்துக்காக சூரஜ் இஎஸ்
சிறந்த டப்பிங் கலைஞர் (பெண்): "பரோஸ்" படத்துக்காக சயோனாரா பிலிப்
சிறந்த டப்பிங் கலைஞர் (ஆண்): "பரோஸ்" படத்துக்காக பாசி வைக்கம்





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!