
மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜிதின் கே.ஜோஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டப்பிங் பணிகள் மம்முட்டிக்காக காத்திருந்தன. தற்போது அவர் மீண்டும் ஆக்டிவாக செயல்பட ஆரம்பித்து விட்ட நிலையில் இந்த படத்தின் டப்பிங்கை முடித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து வரும் நவம்பர் 27ம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மம்முட்டி தயாரித்துள்ள இந்த படத்தை அவரது மகன் துல்கர் சல்மான் தனது, வே பாரர் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!