
உன்னி முகுந்தன் விலகிய நிலையில் மார்கோ 2ம் பாக டைட்டில் அறிவிப்பு
அதேசமயம் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டது. உன்னி முகுந்தன் இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக உன்னி முகுந்தனும் இதில் ஆர்வம் காட்டிய நிலையில் அதன் பிறகு இந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்று அறிவித்து பின்வாங்கினார். காரணம் இந்த படத்தின் மூலம் நிறைய எதிர்மறை விமர்சனங்களை சந்தித்ததால் இரண்டாம் பாகத்தில் தான் நடிக்கவில்லை என்று அவர் கூறியிருந்தார்.
அதேசமயம் சமீபத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறாக மலையாளத்தில் உருவாகும் மா வந்தே என்கிற படத்தில் பிரதமர் கதாபாத்திரத்தில் தான் உன்னி முகுந்தன் நடிக்க இருக்கிறார். இப்படி ஒரு படத்தில் நடிக்கும்போது வன்முறை காட்சிகள் கொண்ட படத்தில் தான் நடிப்பது சரியாக இருக்காது என்பதாலேயே அவர் விலகி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
முதல் பாக ஹீரோவும் ஒதுங்கிக் கொண்ட நிலையில் புதிய கதாநாயகனும் தேர்வாகாத நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு லார்ட் மார்க்கோ என டைட்டில் வைத்து அறிவித்துள்ளது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ஹனீப் அதேனி தான் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!