
ஆரம்பமானது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9
இதனிடையே, தெலுங்கில் 9வது சீசன் நேற்று முதல் ஆரம்பமானது. 3வது சீசனிலிருந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த நடிகர் நாகார்ஜுனா 9வது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நானி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
நேற்று ஆரம்பமான 9வது சீசனில் 15 போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். "7 ஜி ரெயின்போ காலனி" படத்தில் நடித்த தெலுங்கு நகைச்சுவை நடிகைர் சுமன் ஷெட்டி, நடிகை நிக்கி கல்ரானியின் சகோதரி சஞ்சனா கல்ரானி அந்த 15 போட்டியாளர்களில் தமிழ் ரசிகர்களுக்குக் கொஞ்சம் அறிமுகமானவர்கள்.
அடுத்த 107 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முந்தைய சீசன்களைப் போல இந்த சீசனும் பேசப்படுமா என்பது போகப் போகத் தெரியும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!