
பிரேமலு நடிகருக்கு காய்ச்சல் : படப்பிடிப்பை ரத்து செய்த மோகன்லால்
படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தில் மோகன்லால் உடனான அனுபவங்கள் குறித்து சங்கீத் பிரதாப் கூறும்போது, “குமுளியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது எனக்கு ஒரு நாள் தாங்க முடியாத காய்ச்சல் வந்தது. இயக்குனர் சத்யன் அந்திக்காடு, மோகன்லாலுக்கு ஒதுக்கப்பட்ட அந்த அறையிலேயே என்னை ஓய்வெடுக்கும்படி கூறினார். அந்த ஊரில் இருந்த டாக்டர் வரவழைக்கப்பட்டு எனக்கு ஊசி போட்டு மருந்து மாத்திரைகள் கொடுத்தார். அப்போது அங்கே வந்த மோகன்லால் டாக்டரிடம் என் உடல் நிலை குறித்து கவனமாக கேட்டறிந்தார்.
அதன்பிறகு என் அருகில் நின்று என் தலையை சில வினாடிகள் கோதிவிட்டு நன்றாக ஓய்வெடு என்று கூறினார். அவரது அன்பை கண்டு என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. அதுமட்டுமல்ல அன்றைய தினம் நானும் அவரும் நடிக்கும் காட்சிகள் தான் எடுக்கப்பட இருந்தன. அதனால் அன்றைய தினம் படப்பிடிப்பை ரத்து செய்து விடுமாறும் அறிவித்துவிட்டார் மோகன்லால். அதன்பிறகு எனக்கு காய்ச்சல் குறைந்ததும், மறுநாள் தான் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. என்னைப் போன்று வளர்ந்து வரும் ஒரு சிறிய நடிகருக்காக மோகன்லால் காட்டிய பரிவு என் வாழ்நாளில் மறக்க முடியாதது” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!