
கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர்
இவர் மலையாளத்தில் மிகப்பெரிய வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர். 3௦ ஆண்டுகளுக்கு மேல் நடித்து வருகிறார். இரண்டு படங்களை இயக்கியும் உள்ளார். தவிர பிரபல நடிகை வாணி விஸ்வநாத்தின் கணவரும் கூட. இப்போது நடைபெற்று வரும் நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு வேட்பு மனு தாக்கல் செய்து பின் சர்ச்சை காரணமாக வாபஸ் பெற்றுக் கொண்டவர்.
தமிழில் ஸ்கெட்ச், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் மெயின் வில்லனாக நடித்த இவரை கூலி படத்தில் ஒப்புக்கு சப்பானியாக ரஜினிக்கு பின்னால் நிற்கும் 18 பேரில் ஒரு நபராக நிற்க வைத்து வெறும் இரண்டு மூன்று காட்சிகளில் இடம் பெற வைத்து ஒரு வசனம் கூட பேசவிடாமல் வீணடித்து விட்டார்கள் என்றே சொல்லலாம்.
இதற்கு முன் பீஸ்ட் படத்தில் கூட நல்ல நடிப்புத் திறமை கொண்ட மலையாள வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ, இயக்குனர் நெல்சன் தன்னை சரியாக பயன்படுத்தவில்லை, வீணடித்து விட்டார் என்று அந்த சமயத்தில் பரபரப்பாக குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!