
உடல் மெலிந்து உருமாறிய தோற்றத்தில் அதிர்ச்சி அளித்த பிரபல குணச்சித்திர நடிகர்
பின்னர் இது அவர் தற்போது நடித்துள்ள "வேற ஒரு கேஸ்" என்கிற படத்திற்காக அவர் நடிக்கும் கதாபாத்திரம் என்று தெரிய வந்தாலும் இவர் உடல் மெலிந்து இருப்பதற்கு காரணம் என்ன, உடல் பிரச்னையா என்றும் ரசிகர்களுக்கு சந்தேகம் இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் செபி சவுகத் கூறும்போது, “அலான்சியர் லே நல்ல ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருக்கிறார். இந்தப் படத்தின் கதை மற்றும் அவரது கதாபாத்திரம் குறித்து அவரிடம் பேசும்போது பேச்சுவாக்கில் இந்த கதாபாத்திரத்திற்கு உடல் எடையை குறைத்து இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் அதற்காக சில டிப்ஸ்களையும் சொல்லியிருந்தேன்
அதன்பிறகு படப்பிடிப்பு துவங்கும் சமயத்தில் அவருக்கு ஆடை அளவு எடுப்பதற்காக சென்றபோது தான் அவர் இப்படி மெலிந்து இருப்பதை பார்த்தேன். ஏதாவது உடல் பிரச்னையா என்று கேட்டபோது, இல்லை இந்த படத்திற்காக நீங்கள் சொன்ன டயட்டை கடைபிடித்து உடல் எடையை குறைத்துள்ளேன் என்று கூறி என்னை ஆச்சரியப்படுத்தினார். மற்றபடி சமீபத்தில் டப்பிங் பேச வந்தபோது அவர் மீண்டும் தனது பழைய தோற்றத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார். அதனால் ரசிகர்கள் இவர் குறித்து தேவையில்லாமல் புதிய கட்டுக் கதைகளை உருவாக்குவதை தவிருங்கள்” என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!