
எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர்
அது மட்டுமல்ல தற்போது விரைவில் நடைபெற இருக்கும் நடிகர் சங்க தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு மீண்டும் நடிகர் பாபுராஜ் போட்டியிட விண்ணப்பித்தும் இருந்தார். இந்த நிலையில் தான், அவர் போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெறுகிறேன் என்றும் நடிகர் சங்கத்தில் இனி எந்த பொறுப்புகளிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் ஒரு கடிதம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்..
இது குறித்து நடிகர் பாபுராஜ் கூறும்போது, “கடந்த எட்டு வருடங்களாக நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறேன். ஆனால் எனக்கு கிடைத்ததெல்லாம் அவதூறுகளும், பாலியல் குற்றச்சாட்டுகள் மட்டுமே. நடிகர் மோகன்லால் விலகியபோது நானும் விலகுவதற்கு தான் முடிவு எடுத்தேன். ஆனால் பல உறுப்பினர்கள் என்னை விலக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் விலகவில்லை. ஆனால் இப்போது என்னால் தான் மோகன்லால் ராஜினாமா செய்தார் என்பது போல செய்திகளை திரித்து வெளியிடுகிறார்கள். அதனால் நான் இனி நடிகர் சங்கத்தின் எந்த செயல்பாடுகளிலும் கலந்து கொள்ளப் போவதில்லை. எந்த ஒரு பொறுப்புக்கும் போட்டியிடப் போவதில்லை. அதனால் என்னுடைய வேட்பு மனுவை வாபஸ் பெறுகிறேன். இதை யாருக்கும் பயந்து நான் செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!