
மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில்
பஹத் பாசில் நடிக்க விரும்பியது 1989ல் மோகன்லால் நடிப்பில் பத்மராஜன் இயக்கத்தில் கல்ட் கிளாசிக் படமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற "சீசன்" படத்தை தான். “இந்தப் படத்தின் ரீமேக்கில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இயக்குனர் அமல் நீரத்திடம் அடிக்கடி இந்த படத்தின் ரீமேக்கை நீங்கள் இயக்குங்கள், நான் நடிக்கிறேன்.. எல்லாம் சரியாக அமைந்தால் நானே இந்த படத்தையும் தயாரிக்கிறேன் என்று அடிக்கடி நச்சரித்து வருகிறேன்” என்றும் கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல ரசிகர்கள் தவறவே விடக்கூடாது என ஐந்து படங்களை பட்டியலிடுங்கள் என அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் கூறிய படங்களில் இதுவும் ஒன்று, இவற்றைத் தவிர ரஜினிகாந்தின் "ஜானி", அமிதாப் பச்சனின் "மிழி" இத்தாலிய படங்களான "மலினா" மற்றும் "II போஸ்டினோ ; தி போஸ்ட் மேன்" ஆகிய படங்களையும் குறிப்பிட்டுள்ளார். பஹத் பாசில்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!