
ஜோஷி, உன்னி முகுந்தன் இணையும் புதிய படம் அறிவிப்பு
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "தேசிய விருது வென்ற "மேப்படியான்" மற்றும் 100 கோடி வசூலித்த ஆக்ஷன் திரைப்படமான "மார்கோ" படங்களை தொடர்ந்து உன்னி முகுந்தன் பிலிம்ஸ் தற்போது இயக்குநர் ஜோஷியுடன் இணைகிறது.
"பொரிஞ்சு மரியம் ஜோஷ்", "கிங் ஆப் கோதா" போன்ற படங்களில் திரைக்கதைக்காக அறியப்பட்ட எழுத்தாளர், இயக்குநர் அபிலாஷ் என்.சந்திரன், இயக்குநர் ஜோஷியுடன் இந்தப் படத்தில் இணைகிறார்.
இதன் மூலம் இயக்குநர் ஜோஷியின் புதிய படம் வெறும் ஆக்ஷன் மட்டுமல்லாது ஆழமான எமோஷன், மறக்க முடியாத தருணங்களையும் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுக்கிறது. இதற்கு முன்பு பார்த்திராத வகையில் உன்னி முகுந்தன் ஆக்ஷன் அவதாரத்தில் நடிக்கிறார்" என்று கூறப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!