
அறிமுக இயக்குனர் டைரக்ஷனில் 365வது படத்தை அறிவித்த மோகன்லால்
இந்த நிலையில் தனது 365வது படம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் மோகன்லால். அறிமுக இயக்குனர் ஆஸ்டின் டான் தாமஸ் இயக்குகிறார். இவர் கடந்த 2020ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‛அஞ்சாம் பாதிரா" படத்தில் முதன்மை துணை இயக்குனராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். நீண்ட நாட்கள் கழித்து மோகன்லால் ஒரு அறிமுக இயக்குனரின் படத்தில் நடிப்பது ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது
மிகப்பெரிய வெற்றிகளை பெற்ற இஷ்க் மற்றும் ஆலப்புழா ஜிம்கானா ஆகிய படங்களுக்கு கதை எழுதிய கதாசிரியர் ரத்தீஷ் ரவி இந்த படத்திற்கு கதை எழுதுகிறார். பிரபலமான ஆசிக் உஸ்மான் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.. இந்தப்படம் குறித்து வெளியான போஸ்டரில் கக்கி உடை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. அதனால் இந்தப்படத்தில் மோகன்லால் போலீஸ் அதிகாரியாக நடிக்கலாம் என்றும் தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!