
ரெட்ரோ படப்பிடிப்பில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மம்முட்டி
அதன் பிறகு கேரளாவில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அந்த சிறுமியை மேடைக்கு அழைத்து அவரின் துணிச்சலை நடிகர் சூர்யா பாராட்டி பேசினார். இந்த வீடியோ வெளியாகி வைரலானது. இந்த ஆவ்னி வேறு யாருமல்ல, மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்துள்ள நடிகை அஞ்சலி நாயர் என்பவரின் மகள் தான். தற்போது படம் வெளியாகி தனது மகளிண் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்து வரும் நிலையில் சூர்யா இப்படி தன் மகளை பாராட்ட வீடியோவை பகிர்ந்து கொண்டுள்ளார் அஞ்சலி நாயர்.
மேலும் இது பற்றி கூறும்போது, "அந்த படப்பிடிப்பு சமயத்தில் என் மகள் காயம் பட்டாலும் பரவாயில்லை என்று தொடர்ந்து காட்சிகளின் நடித்தார். சினிமாவின் மீது அந்த அளவிற்கு அவர் ஆர்வமாக இருக்கிறார். அது மட்டுமல்ல இப்படி அவருக்கு காயம் ஏற்பட்ட விவரம் தெரிய வந்தவுடன் நடிகர் மம்முட்டி உடனடியாக தொடர்புகொண்டு, குறிப்பிட்ட மருத்துவமனையின் பெயரை கூறி அங்கே சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி ஆலோசனை அளித்தார். அவருக்கு என்னுடைய நன்றி” என்று கூறியுள்ளார் அஞ்சலி நாயர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!