
பஹத் பாசிலை தொடர்ந்து நிவின்பாலியை இயக்கும் அகில் சத்யன்
அதேபோல இரண்டாவது மகனான அகில் சத்யன் கடந்த 2023ல் பஹத் பாசில் நடித்த பாச்சுவும் அற்புத விளக்கும் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படமும் வெற்றி படமாக அமைந்தது. இந்த நிலையில் அவர் தற்போது நிவின்பாலி நடிப்பில் தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கி விட்டது. ஒரு பேண்டஸி காமெடி, டிராமாவாக இந்த படம் உருவாக இருக்கிறது. இந்த படத்திற்கு தமிழ் இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் இயக்கத்தில் ஏப்ரல் 28ம் தேதி வெளியான பாச்சுவும் அற்புத விளக்கும் ரிலீஸ் ஆனது. இந்த வருடம் அதே தேதியில் தற்போது தனது இரண்டாவது படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளார் அகில் சத்யன். இதற்கு முன்னதாக இவரது முதல் படத்திலேயே பஹத் பாசிலுக்கு பதிலாக முதலில் நிவின்பாலி தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் நிவின்பாலியின் கால்ஷீட் சரி வராததால் அந்த படத்தில் பஹத் பாசில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!