
மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி
இது குறித்து அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் மெஸ்ஸி அனுப்பிய டி-சர்ட் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளதுடன், “விவரிக்க முடியாத சில தருணங்கள் நமக்கு வாழ்க்கையில் கிடைக்கும். அப்படி ஒரு அனுபவம் இன்று எனக்கு கிடைத்தது. எனக்கு பரிசாக வந்த பார்சலை நான் பிரித்தபோது ஒரு நொடி என் இதயத் துடிப்பு நின்று துடித்தது அதில் கால்பந்து வீரர் மெஸ்ஸி அவர் கையெழுத்திட்டு இருந்த ஒரு ஜெர்ஸி இருந்தது. அது மட்டுமல்ல என் பெயரையும் அவர் தன் கைப்படவே எழுதி இருந்தது தான் என்னை பிரமிக்க வைத்தது.
நீண்ட காலமாக களத்தில் அவரது திறமைக்காக மட்டுமல்லாமல் அவரது மனிதநேயம் மற்றும் பெருமைகளுக்காக அவரை ஆராதிக்கும் என்னைப் போன்ற ஒருவருக்கு இது உண்மையிலேயே ஸ்பெஷலான பரிசு தான். இதை சாத்தியமாக்கியதற்கு என்னுடைய இரண்டு நண்பர்களாக டாக்டர் ராஜிவ் மாங்கோட்டில் மற்றும் ராஜேஷ் பிலிப் இருவருக்கும் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் மோகன்லால்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!