
பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு
தனது அனுமதியின்றி பயன்படுத்தியதும், இதுபோன்று ஒரே மோசமான காட்சியில் தனது புகைப்படத்தை பயன்படுத்தியதும் தனக்கு மிகுந்த மன உளைச்சலையும் சமூகத்தில் தேவையில்லாத சங்கடத்தையும் ஏற்படுத்தியதாக கூறி 2017ல் படக்குழுவினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பிரின்சி பிரான்சிஸ். இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் இந்த புகைப்படத்தை பயன்படுத்துவதற்காக எடுத்துக் கொடுத்த உதவி இயக்குனர் மோகன்தாஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம்
இதற்கிடையே படத்தில் இருந்து தன்னுடைய புகைப்படத்தை நீக்கும்படி பலமுறை அவர் கோரிக்கை வைக்கும் இப்போது வரை அவரது புகைப்படம் நீக்கப்படாமலேயே இருக்கிறது. இந்த நிலையில் 8 வருடங்கள் கழித்து இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கியுள்ள நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண் விரிவுரையாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் 1.68 லட்சம் வழக்கு செலவு தொகையாக கொடுக்க வேண்டும் என்றும் படக்குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!