
மோகன்லால் மகனை இயக்கும் பிரம்மயுகம் இயக்குனர்
தற்போது பிரம்மயுகம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க தயாராகி விட்டார் ராகுல் சதாசிவன். இந்த படத்தின் கதாநாயகனாக மோகன்லாலின் மகன் பிரணவ் நடிக்கிறார். வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. பிரம்மயுகம் படத்தை தயாரித்த நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இரண்டும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. பிரம்மயுகம் படத்தில் பணியாற்றிய அதே தொழில்நுட்ப கலைஞர்கள் தான் இந்த படத்திலும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!