
லூசிபர் எழுப்பிய கேள்விகளுக்கு எம்புரான் விடை சொல்லும் : பிரித்விராஜ்
அந்த வகையில் கடந்து சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் தான் முதல்முறையாக இயக்குனராகி, மோகன்லாலை வைத்து இயக்கிய லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எம்புரான் என்கிற பெயரில் எடுத்துள்ளார். மோகன்லால், மஞ்சு வாரியர் உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்த பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் இடம்பெறுகின்றனர். அதேசமயம் முதல் பாக கதையின் தொடர்ச்சியாகவே இந்த இரண்டாம் பாகமும் உருவாக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தில் மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் ஆகியோரின் கதாபாத்திரங்கள் மர்மம் நிறைந்ததாகவே இருந்தன. அவர்கள் உண்மையிலேயே யார் அவர்களது பின்னணி என்ன, அவர்களது நட்பு எப்படி உருவானது என்பதை பற்றி எல்லாம் எதுவுமே சொல்லப்படவில்லை, இந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் பிரித்விராஜ் நடித்துள்ள சையத் மசூர் என்கிற கதாபாத்திர போஸ்டர் வெளியாகி உள்ளது. இது குறித்து இயக்குனர் பிரித்விராஜ் கூறும்போது முதல் பாகத்தில் லூசிபர் எழுப்பிய பல கேள்விகளுக்கு இந்த எம்புரான் விடை சொல்லும் என்று கூறியுள்ளார். இதில் மோகன்லாலுக்கும் தனக்குமான முன் கதை சொல்லப்பட இருக்கிறது என்றும் கூறியுள்ளார் பிரித்விராஜ்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!