
துல்கர் சல்மான் படம் மூலம் மீண்டும் டைரக்சனுக்கு திரும்பும் மின்னல் முரளி ஒளிப்பதிவாளர்
இந்த நிலையில் 2016ல் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கலி படத்தைத் தொடர்ந்து மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்ப இருக்கிறாராம் சமீர் தாஹிர். ஹீரோ வேறு யாரும் அல்ல.. இந்தமுறையும் துல்கர் சல்மான் தான். இதற்கான கதை உருவாக்கும் பணியில் சமீப நாட்களாக ஈடுபட்டு வரும் சமீர் தாஹிர் வேறு எந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்வதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம். துல்கர் சல்மான் தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள படங்களை முடித்த பிறகு இன்னும் சில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்க இருக்கிறாராம் சமீர் தாஹிர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!