வளைகுடா நாடுகளில் வினித் சீனிவாசன் படம் வெளியாக தடை
ஜன 31, 2025
Advertisement
மலையாளத்தில் இயக்குனர், நடிகர் என மாறி மாறி சவாரி செய்து வருபவர் வினீத் சீனிவாசன். கடந்த வருடம் இவரது இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடித்த வருஷங்களுக்கு சேஷம் என்கிற படத்தை இயக்கினார். அடுத்ததாக அவரது நடிப்பில் ஒரு ஜாதி ஜாதகம் என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாக வேண்டிய இந்த திரைப்படம் தற்போது ஒரு வழியாக வரும் ஜனவரி 31ஆம் தேதி (இன்று) வெளியாகி உள்ளது.
அதேசமயம் இந்த படத்தை வெளியிடுவதற்கு வளைகுடா நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய விஷயங்களான ஓரினச்சேர்க்கை போன்ற அம்சங்களில் ஒன்றை மையப்படுத்தி இதன் கதை உருவாகியுள்ளதால் இந்த படம் தடை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை மம்முட்டி நடித்த கத பறயும்போல் படத்தை இயக்கிய இயக்குனர் மோகனன் இயக்கியுள்ளார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!