
அமைச்சரான பிறகு முதன்முறையாக படப்பிடிப்பில் கலந்துகொண்ட சுரேஷ்கோபி
2024ல் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் எம்பி ஆக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத்தொடர்ந்து அவருக்கு பெட்ரோலியம் எரிவாயு துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே துறை சார்ந்த பணிகளை கவனித்து வந்த அவர் தான் ஏற்கனவே நடிப்பதாக ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து முடித்துக் கொடுப்பதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தார்.
சமீபத்தில் தான் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்தது. அந்த வகையில் கடந்த 2020லேயே அவர் நடிப்பதாக துவங்கப்பட்டு கொரோனா தாக்கம், கதை பிரச்னை, சுரேஷ் கோபியின் அரசியல் பயணம் என பல காரணங்களால் நின்று போயிருந்த ஒத்தக்கொம்பன் திரைப்படம் தற்போது படப்பிடிப்பை துவங்கியுள்ளது. மத்திய அமைச்சரான பிறகு நீண்ட நாட்கள் கழித்து சுரேஷ்கோபி. இந்த படத்தில் நடிப்பதற்காக முதன்முறையாக நேற்று முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்தப் படத்தை மேத்யூ தாமஸ் என்பவர் இயக்குகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!