
எம்டி வாசுதேவன் நாயரின் நாவலை படமாக்கும் முயற்சி கடைசி வரை கனவாகவே போனது
மகாபாரத கதாபாத்திரங்களில் பீமனின் கண்ணோட்டத்தில் இந்த கதையை விவரிப்பதாக எழுதியிருந்தார் எம்டி வாசுதேவன் நாயர். இதில் நடிகர் மோகன்லால் பீமனாக நடிப்பதாக இருந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரபு நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் இந்த படத்தை மகாபாரதம் என்கிற டைட்டிலில் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் தயாரிப்பதற்கு முன் வந்தார். பிரமாண்ட அறிவிப்பும் வெளியானது. மோகன்லாலை வைத்து ஓடியன் என்கிற படத்தை இயக்கிய ஸ்ரீகுமார் மேனன் என்பவர்தான் இந்த படத்தை இயக்குவதாக இருந்தது.
ஆனால் தனது ஸ்கிரிப்ட்டை சொன்ன நாட்களில் பயன்படுத்தவில்லை, படத்தை துவங்கவில்லை என்று கூறி இந்த கதையை படமாக்க கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தன நாவலை திரும்ப பெற்றார் எம்டி வாசுதேவன் நாயர். அதனால் இந்த படம் அப்படியே கைவிடப்பட்டது. அதேசமயம் அவர் எழுதிய 10 சிறுகதைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனோரதங்கள் என்கிற பெயரில் ஒரு ஆந்த்ராலஜி படமாக மோகன்லால், மம்முட்டி, கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்க ஒரு திரைப்படமாக உருவானது கொஞ்சம் ஆறுதலான விஷயம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!