
மலையாள திரைப்பட நடிகை மீனா கணேஷ் காலமானார்
19வது வயதில் நாடகத்தில் நடிக்க துவங்கிய இவரின் முதல் மலையாளத் திரைப்படம், 1976ல் வெளிவந்த "மணிமுழக்கம்" ஆகும். பல்வேறு நாடகங்களில் நடித்துள்ள இவர், 200க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1991ல் "முகசித்ரம்" என்ற மலையாளத் திரைப்படத்தில் இவர் நடித்த "பாத்தும்மா" என்ற கதாபாத்திரம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.
இவரது கணவர் பிரபல மலையாள நாடக ஆசிரியரும், இயக்குனரும், நடிகருமான கணேஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சி தொடர் இயக்குனர் மனோஜ், சங்கீதா ஆகியோர் இவர்களது வாரிசுகளாவர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!