
பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா
இந்த நிலையில் அவர் பெரிய பட்ஜெட்டில் முன்னணி நடிகரும், துணை முதல்வருமான பவன் கல்யாண் நடிப்பில் "ஹரி ஹர வீரமல்லு" படத்தை இயக்கி வருகிறார். இது ஒரு பீரியட் படமாகும். பவன் கல்யாண் நடிக்கும் முதல் பீரியட் படமும் இதுதான். இப்படம் 17ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் நடக்கும் ஆக்ஷன்- அட்வென்ச்சர் படமாகும். ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழைகளுக்கு உதவுவதற்காக ஊழல் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடும் புகழ்பெற்ற ஹரி ஹர வீர மல்லுவின் கதை.
பவன் கல்யாணுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல் முகலாய பேரரசராகவும், நிதி அகர்வால் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நாசர், ரகு பாபு, சுனில் மற்றும் நோரா பதேஹி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கீரவாணி இசை அமைக்கிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்தில் இந்தப் படம் அடுத்த ஆண்டு மார்ச் 28ல் வெளியாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!